Saturday 9 March 2013

தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர்

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா. பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார்.இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது.

உ.வே.சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-ல் பிறந்தார். தமிழ் தாத்தா என்றழைக்கப்படும் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகம். பழம் பெரும் தமிழ் இலக்கியங்களைத் தேடிப்பிடித்து தமிழுக்கு மகத்தான சேவையாற்றியவர்.இவர் இல்லையென்றால் நாம் தமிழின் பல நூல்களை இழந்துவிட்டிருப்போம். ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்க அவர் எடுத்துக்கொண்ட உழைப்பை, கடும் போராட்டத்தை அவரது சுயசரிதமான என் சரித்திரத்தில் நாம் படிக்கும்போது நம் மனதில் என்றென்றுமாக நிலைத்து நின்றுவிடுகிறார் உ.வே.சா. அவர் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார். அவர் பிறந்த இந்த பிப்ரவரி மாதத்தில் அவரையும் அவர் ஆற்றிய அரும் பணிகளையும் நினைவு கூர்வது நம் கடமையாகும்.

No comments:

Post a Comment